வளர்ந்து வந்த பாதை பற்றிச் சில வார்த்தைகள் .. ..
எமது கழகம் 2000 ஆம் ஆண்டு முதல் லோறன்ஸ்கூக் நகரத்தில் வாழும் தமிழ்மக்களின் ஒன்றுகூடலுக்குக் களம் அமைக்கும் முகமாகவும், சிறுவர் முதல் பெரியோர் வரையிலான அனைவரினதும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டது.
சமீப காலத்தில், லோறன்ஸ்கூக் நகரத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் எம் நண்பர்களும்
இக்கழகத்தில் இணைந்து இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பதனைக் கூறுவதில் நாம் பெருமையடைகின்றேம்.
லோறன்ஸ்கூக் நகரசபையின் கலாசாரப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட எமது விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு நிதியுதவியும், விளையாட்டரங்கு உதவியும் புரிந்து எமது கழகத்தின் வளர்ச்சியில் லோறன்ஸ்கூக் நகரசபையை பெரும்பங்கு வகித்துவருகின்றது.
ஒற்றுமை, ஒருமைப்பாடு, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இக்கழகமானது படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகின்றதென்றால் அதன் பின்னால் இருக்கக் கூடிய விளையாட்டு வீரர்களினதும், ஆதரவாளர்களினதும் உழைப்பு வெள்ளிடைமலை.
எமது கழகமானது விளையாட்டுப் போட்டிகளுடன் நின்று விடாது@ எமது பாரம்பரிய விழாக்களையும், பல ஒன்று கூடல்களையும் ஒழுங்கு செய்து, எம் இன, மொழி, கலாச்சாரங்களைத் தெரிந்தவர்களாக, பேணக்கூடியவர்களாக எமது புதிய தலைமுறையினரை உருவாக்கும்; முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
எம் வளர்ச்சியிலும், சிறப்பிலும் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சக விளையாட்டுக் கழகங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.